< Back
பிற விளையாட்டு
உலக ஸ்னூக்கர் போட்டியில் சென்னை வீரர், வீராங்கனை பங்கேற்பு
பிற விளையாட்டு

உலக ஸ்னூக்கர் போட்டியில் சென்னை வீரர், வீராங்கனை பங்கேற்பு

தினத்தந்தி
|
13 Aug 2022 7:42 AM IST

உலக ஜூனியர் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி ருமேனியாவில் வருகிற 15-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை:

உலக ஜூனியர் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் வருகிற 15-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது. 16, 18, 21 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் இருபாலருக்கும் போட்டி நடத்தப்படுகிறது.

இதில் 16, 18, 21 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் இந்தியா சார்பில் பங்கேற்க சென்னையை சேர்ந்த பள்ளி மாணவரான லட்சுமி நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல் 21 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் கலந்து கொள்ள சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவியான அனுபமா தேர்வாகி இருக்கிறார்.

இவர்கள் இருவரும் சென்னை கோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் சர்வதேச வீரர் சலீம் ஸ்னூக்கர் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்