< Back
பிற விளையாட்டு
பேட்மிண்டன் தரவரிசையில் சாத்விக்- சிராக் ஜோடி 3-வது இடத்துக்கு முன்னேற்றம்
பிற விளையாட்டு

பேட்மிண்டன் தரவரிசையில் சாத்விக்- சிராக் ஜோடி 3-வது இடத்துக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
21 Jun 2023 2:06 AM IST

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்தியாவின் பி.வி.சிந்து 14-ல் இருந்து 12-வது இடத்துக்கு வந்துள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் சமீபத்தில் இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்த இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி இரட்டையர் தரவரிசையில் 3 இடங்கள் உயர்ந்து 3-வது இடத்தை பிடித்துள்ளது. அவர்களின் சிறந்த தரநிலை இதுவாகும்.

ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 9-வது இடத்தில் நீடிக்கிறார். ஸ்ரீகாந்த் 3 இடங்கள் முன்னேறி 19-வது இடத்தையும், லக்ஷயா சென் இரு இடம் ஏற்றம் கண்டு 18-வது இடத்தையும், பிரியன்ஷூ ரஜாவத் 4 இடம் அதிகரித்து 30-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்தியாவின் பி.வி.சிந்து 14-ல் இருந்து 12-வது இடத்துக்கு வந்துள்ளார். சாய்னா நேவால் 31-வது இடம் வகிக்கிறார். பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரீஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் இணை 16-வது இடத்தில் தொடருகிறது.

மேலும் செய்திகள்