< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
கனடா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து கால்இறுதிக்கு தகுதி
|8 July 2023 5:53 AM IST
கனடா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கேல்கேரி நகரில் நடந்து வருகிறது.
கேல்கேரி,
கனடா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கேல்கேரி நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்துவை எதிர்த்து விளையாட வேண்டிய ஜப்பானின் நாட்சுகி நிடாரியா காயம் காரணமாக விலகியதால், போட்டியின்றி சிந்து கால்இறுதியை எட்டினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம்வென்ற இந்திய வீரரான லக்ஷயா சென் 21-15, 21-11 என்ற நேர்செட்டில் பிரேசிலின் கோர் கோலோவை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.