< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
கனடா ஓபன்: பி.வி. சிந்து, லட்சயா சென் அரையிறுதி போட்டிக்கு தகுதி
|8 July 2023 12:21 PM IST
கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து மற்றும் லட்சயா சென் ஆகியோர் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர்.
கல்காரி,
கனடாவின் கல்காரி நகரில் கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சீனாவின் காவோ பேங் ஜீ என்பவரை எதிர்த்து விளையாடினார்.
இந்த போட்டியில், 21-13, 21-7 என்ற நேர் செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து, அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய பி.வி. சிந்து, ஜப்பானின் அகானே யமகுசியை எதிர்கொள்கிறார்.
இந்திய வீரரான லட்சயா சென் தனது போட்டியின்போது, ஜெர்மனியின் ஜூலியன் கர்ராகி என்பவரை 21-8, 17-21, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார். அவர் ஜப்பானின் கென்டா நிஷிமோடோ என்பவரை அரையிறுதியில் சந்திக்கிறார். கனடா ஓபன் போட்டிகள் நாளையுடன் (ஜூலை 9) நிறைவடைகின்றன.