< Back
பிற விளையாட்டு
கனடா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பிரியன்ஷு ரஜாவத்

கோப்புப்படம் 

பிற விளையாட்டு

கனடா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பிரியன்ஷு ரஜாவத்

தினத்தந்தி
|
6 July 2024 3:59 PM IST

அரையிறுதி ஆட்டத்தில் ரஜாவத் பிரான்சின் அலெக்ஸ் லேனியரை எதிர்கொள்ள உள்ளார்.

ஒட்டாவா,

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் கனடாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சனை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 21-11 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய பிரியன்ஷு ரஜாவத், ஆட்டத்தின் 2வது செட்டை 17-21 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அபாரமாக செயல்பட்ட பிரியன்ஷு ரஜாவத் 21-19 என்ற புள்ளிக்கணக்கில் ஆண்டர்ஸ் ஆண்டன்சனை வீழ்த்தினார்.

இறுதியில் இந்த ஆட்டத்தில் 21-11, 17-21, 21-19 என்ற புள்ளிக்கணக்கில் பிரியன்ஷு ரஜாவத் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ரஜாவத் பிரான்சின் அலெக்ஸ் லேனியரை எதிர்கொள்ள உள்ளார்.

மேலும் செய்திகள்