< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்
|24 Aug 2023 2:18 AM IST
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
ஹோபன்ஹேகன்,
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் புகுந்த இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-16, 21-9 என்ற நேர் செட்டில் வெறும் 30 நிமிடங்களில் ஆஸ்திரேலியாவின் கென்னத் ஸி ஹூய் - மிங் சூயன் லிம் இணையை தோற்கடித்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றை எட்டியது.
காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன்களான சாத்விக் - சிராக் ஷெட்டி கூட்டணி அடுத்து இந்தோனேசியாவின் லியோ ரோலி கார்னன்டோ- டேனியல் மார்தின் ஜோடியுடன் மோதுகிறது.
பெண்கள் இரட்டையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-18, 21-10 என்ற நேர் செட்டில் சாங் சிங் ஹய் - யாங் சிங் டுன் (சீனதைபே) இணையை விரட்டியடித்தது.