< Back
பிற விளையாட்டு
ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்றால் பரிசுத்தொகை - சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அறிவிப்பு

கோப்புப்படம் 

பிற விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்றால் பரிசுத்தொகை - சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அறிவிப்பு

தினத்தந்தி
|
30 May 2024 3:01 AM IST

தங்கப்பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.41 லட்சம் ரொக்கப்பரிசாக வழங்கப்படும் என்று சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அறிவித்துள்ளது.

ஜெனீவா,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடக்கிறது. இதில் குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, தங்கப்பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.41 லட்சம் ரொக்கப்பரிசாக வழங்கப்படும் என்று சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அறிவித்துள்ளது. தங்கப்பதக்கத்தை கைப்பற்றும் வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.20 லட்சமும், கால்இறுதிக்கு முன்னேறும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளுக்கும் தலா ரூ.8 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்