< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆசிய ஜூனியர் பேட்மிண்டனில் இந்திய வீரர் சாதனை
|23 Oct 2023 2:38 AM IST
ஆசிய ஜூனியர் பேட்மிண்டனில் இந்திய வீரர் போர்னில் ஆகாஷ் சாங்மாய் தங்கப்பதக்கம் வென்றார்.
புதுடெல்லி,
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் செங்டுவில் நடந்தது. இதில் சிறுவர்களுக்கான 15 வயதுக்குட்பட்டோர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் போர்னில் ஆகாஷ் சாங்மாய் 21-19, 21-13 என்ற நேர் செட்டில் பேன் ஹாங் சூவானை (சீனா) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.
அசாமை சேர்ந்த 13 வயதான போர்னில், இந்த பிரிவில் மகுடம் சூடிய 2-வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். 17 வயதுக்குட்பட்டோர் சிறுமியர் பிரிவில் இந்தியாவின் தன்வி ஷர்மா 17-21, 21-11, 19-21 என்ற செட் கணக்கில் யட்டாவீமின் கேட்லியாங்கிடம் (தாய்லாந்து) தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.