ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுப்பு: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட்
|ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி,
இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. இவர் 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 65 கிலோ மல்யுத்த பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றார்.
இந்திய மல்யுத்த சம்மேள முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீது வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தபோது வீராங்கனைகளுக்கு ஆதரவாக பஜ்ரங் புனியா குரல் கொடுத்தார். மேலும், போராட்டத்திலும் ஈடுபட்டார்.
இந்நிலையில், ஊக்க மருந்து சோதனைக்காக சிறுநீர் மாதிரியை அனுப்பும்படி பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், பஜ்ரங் புனியா ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அவர் பரிசோதனைக்காக சிறுநீர் மாதிரியை அனுப்பவில்லை.
இதையடுத்து, ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பஜ்ரங் புனியாவை சஸ்பெண்ட் செய்து ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவர் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் அதில் பஜ்ரங் புனியா பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.