< Back
பிற விளையாட்டு
பேட்மிண்டன் தரவரிசையில் பிரனாய் 8-வது இடத்துக்கு முன்னேற்றம்

கோப்புப்படம்

பிற விளையாட்டு

பேட்மிண்டன் தரவரிசையில் பிரனாய் 8-வது இடத்துக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
28 Dec 2022 12:31 AM IST

பேட்மிண்டன் தரவரிசையில் பிரனாய் 8-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய முன்னணி வீரர் எச்.எஸ். பிரனாய் ஒரு இடம் உயர்ந்து 8-வது இடத்தை பிடித்துள்ளார். ஏற்கனவே 2018-ம் ஆண்டில் 8-வது இடம் வகித்த அவர் அதன் பிறகு சரிவுக்குள்ளாகி தற்போது மீண்டும் தனது சிறந்த நிலையை எட்டியிருக்கிறார்.

இந்த ஆண்டில் அவர் ஒற்றையர் பட்டம் எதுவும் வெல்லாவிட்டாலும் பெரும்பாலான போட்டிகளில் கால்இறுதி, அரைஇறுதிவரை முன்னேறியதால் தரவரிசையிலும் ஏற்றம் கண்டுள்ளார். மற்ற இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 7-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 12-வது இடத்திலும் தொடருகிறார்கள்.

காயம் காரணமாக காமன்வெல்த் விளையாட்டுக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்காத இந்திய வீராங்கனை பி.வி.சிந்து பெண்கள் தரவரிசையில் ஒரு இடம் குறைந்து 7-வது இடத்தை பெற்றுள்ளார். மாள்விகா பன்சோத் 30-வது இடத்திலும், சாய்னா நேவால் 31-வது இடத்திலும் இருக்கிறார்கள். ஆண்கள் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இணை 5-வது இடம் வகிக்கிறது.

மேலும் செய்திகள்