< Back
பிற விளையாட்டு
உலக பேட்மிண்டன் போட்டி: முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் தோல்வி

image courtesy; PTI

பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் போட்டி: முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் தோல்வி

தினத்தந்தி
|
22 Aug 2023 3:08 PM IST

இந்திய வீரர் ஸ்ரீகாந்த் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார்.

ஹோபன்ஹேகன்,

28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நேற்று தொடங்கியது.

இதில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் டென்மார்க் வீரரான நிஷிமோட்டோ உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 14-21 மற்றும் 14-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தார். இதன் மூலம் ஸ்ரீகாந்த் முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்துள்ளார்.

இதற்கு முன்னதாக நடைபெற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்திய வீரர்களான பிரனாய், லக்ஷயா சென் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

மேலும் செய்திகள்