< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் பிரனாய் காலிறுதியில் தோல்வி
|26 Aug 2022 4:18 PM IST
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
டோக்கியோ,
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் சீன வீரர் ஜாவோ ஜுன்பெங்குடன் மோதினார்.
இந்த போட்டியில் ஜாவோ ஜுன்பெங் 19-21, 21-6, 21-18 என்ற செட் கணக்கில் பிரனாயை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதையடுத்து அரையிறுதி போட்டிக்கு ஜாவோ முன்னேறியுள்ளார். நாளை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் ஜாவோ, தாய்லாந்து வீரர் குன்லவுட் விடிசார்ன் உடன் மோத உள்ளார்.