ஆசிய பேட்மிண்டன் போட்டி: இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்..!!
|ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
துபாய்,
40-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்திய அணியின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 16-21, 21-17, 21-19 என்ற செட் கணக்கில் மலேசிய ஜோடியான ஓங் யூ சின் மற்றும் தியோ ஈ யி ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
முன்னதாக நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை, சீன தைபேயின் லீ யாங்-வாங் சி லின் ஜோடியுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-18, 13-14 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக லீ யாங்-வாங் சி லின் இணை போட்டியில் இருந்து விலகியது. இதனால் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது.