< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து தோல்வி
|4 Aug 2023 10:56 AM IST
இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தார்.
சிட்னி,
ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து அமெரிக்க வீராங்கனை பி.டபிள்யூ. ஜாங்கை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் 21-12 என தோல்வி அடைந்த சிந்து அடுத்த செட்டை கைப்பற்ற கடுமையாக முயற்சி செய்தார். இருப்பினும் 2வது செட்டிலும் தோல்வி அடைந்த சிந்து 21-12, 21-17 என்ற செட் கணக்கில் பி.டபிள்யூ. ஜாங்கிடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பி.வி.சிந்து இழந்தார்.