< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு முன்னேறினார் பிரனாய்
|13 Jun 2024 12:33 AM IST
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
சிட்னி,
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் எச். எஸ். பிரனாய் 21-10, 23-21 என்ற நேர் செட் கணக்கில் பிரேசில் வீரர் யகோர் கோயல்ஹொவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிரண் ஜார்ஜ், சமீர் வர்மா ஆகிய இந்தியர்களும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர். தமிழக வீரர் சங்கர் முத்துசாமி 16-21, 21-18, 10-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீ ஸியா ஜியாவிடம் போராடி வீழ்ந்தார்.