< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் பிரியான்ஷு, பிரணாய் அரைஇறுதிக்கு தகுதி
|4 Aug 2023 4:05 PM IST
இந்திய வீரர்கள் பிரியான்ஷு ரஜாவத் மற்றும் பிரணாய் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
சிட்னி,
ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் பிரணாய், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தோனேசிய வீரர் அந்தோணி ஜிண்டிங் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 16-21, 21-17, 21-14 என்ற செட் கணக்கில் பிரணாய் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தார்.
இதே போல் மற்றொரு ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டத்தில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சாம்பியனான பிரியான்ஷு ரஜாவத் உடன் கிடாம்பி ஸ்ரீகாந்த் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-13, 21-8 என்ற செட் கணக்கில் பிரியான்ஷு ரஜாவத் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.