< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் காலிறுதிக்கு தகுதி
|13 Jun 2024 6:07 PM IST
இந்தியாவின் பிரனாய், 53-வது தரவரிசையில் உள்ள பிரேசில் வீரரான மிஷா ஜில்பர்மேனுடன் மோதினார்
சிட்னி,
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலக பேட்மிண்டன் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரனாய், 53-வது தரவரிசையில் உள்ள பிரேசில் வீரரான மிஷா ஜில்பர்மேனுடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 21-17, 21-15 என்ற கணக்கில் மிஷா ஜில்பர்மேனை வீழ்த்தினார். இதனால் அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 114-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சமீர் வர்மாவும் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள சிங்கப்பூர் வீரரான லோ கீன் யூவும் மோதினர்.இதில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-14, 14-21, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.