< Back
பிற விளையாட்டு
ஆஸி. ஓபன் பேட்மிண்டன் - எச்.எஸ்.பிரனாய், பிரியான்ஷு ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேற்றம்
பிற விளையாட்டு

ஆஸி. ஓபன் பேட்மிண்டன் - எச்.எஸ்.பிரனாய், பிரியான்ஷு ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
5 Aug 2023 1:29 AM IST

நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் எச்.எஸ்.பிரனாய், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்தை எதிர்கொள்கிறார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்துடன் மோதினார். இதில் ரஜாவத் 21-13, 21-8 என்ற நேர்செட்டில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு வீரரான இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் சரிவில் இருந்து மீண்டு 16-21, 21-17, 21-14 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் அந்தோனி ஜிங்டிங்கை வீழ்த்தி அரையிறுதியை எட்டினார். நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் எச்.எஸ்.பிரனாய், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்தை எதிர்கொள்கிறார்.

மேலும் செய்திகள்