< Back
பிற விளையாட்டு
பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்கள் இடம்பெற்றனர்

கோப்புப்படம்

பிற விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்கள் இடம்பெற்றனர்

தினத்தந்தி
|
4 July 2024 2:34 PM GMT

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரீஸ்,

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி வரும் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்க உள்ளது.

இந்நிலையில் பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 27 பேர் கொண்ட இந்திய தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோரும் தடகள அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும் நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் ஜஸ்வின் அல்ட்ரின் இந்திய தடகள அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) தங்கம் வென்று வரலாறு படைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, அவினாஷ் சபிள் (ஸ்டீபிள் சேஸ்), லவ்லினா, நிகாத் ஜரீன் (குத்துச்சண்டை), பாட்மின்டனில் சிந்து, லக்சயா, சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி உள்ளிட்டோர் திறமை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.

மேலும் செய்திகள்