< Back
பிற விளையாட்டு
ஈரோட்டில்மாநில அளவிலான கபடி போட்டி
ஈரோடு
பிற விளையாட்டு

ஈரோட்டில்மாநில அளவிலான கபடி போட்டி

தினத்தந்தி
|
2 Jan 2023 3:33 AM IST

ஈரோட்டில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது.

மாநில அளவிலான கபடி போட்டி ஈரோடு சூரம்பட்டிவலசு பாரதிபுரத்தில் நேற்று முன்தினம் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்த போட்டியில் ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 57 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன. லீக் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இன்று (திங்கட்கிழமை) இறுதி போட்டி நடக்கிறது.

இந்த போட்டிகளில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 7 அடி உயர கோப்பையும், 2-வது பரிசாக ரூ.30 ஆயிரமும், 6 அடி உயர கோப்பையும், 3-வது பரிசாக ரூ.15 ஆயிரமும், 5 அடி உயர கோப்பையும், 4-வது பரிசாக ரூ.10 ஆயிரமும், 4 அடி உயர கோப்பையும் வழங்கப்படுகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்