< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
அஸ்தனா ஓபன் டென்னிஸ் - கிரீஸ் முன்னனி வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபஸ் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
|9 Oct 2022 1:36 AM IST
இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிக் உடன் சிட்சிபஸ் மோத உள்ளார்.
அஸ்தனா,
அஸ்தனா ஓபன் டென்னிஸ் தொடர் கசகஸ்தான் நாட்டின் தலைநகர் அஸ்தனாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் கிரீஸ் முன்னனி வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபஸ் உடன் போலந்து வீரர் ஹர்காஸ் மோதினார்.
டை பிரேக்கரில் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் போராடி வென்ற சிட்சிபஸ், அடுத்த செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி ஹர்காஸை வீழ்த்தினார். இதன் மூலம் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறிய சிட்சிபஸ், அங்கு ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லேவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்டெபனாஸ் சிட்சிபஸ் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து இன்று நடைபெறும் இறுதி சுற்று ஆட்டத்தில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிக் உடன் சிட்சிபஸ் மோத உள்ளார்.