< Back
பிற விளையாட்டு
ஆசிய மல்யுத்த போட்டி: இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்கம் வென்றார்

image courtesy: SAI twitter via ANI

பிற விளையாட்டு

ஆசிய மல்யுத்த போட்டி: இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்கம் வென்றார்

தினத்தந்தி
|
14 April 2023 4:18 AM IST

ஆசிய மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத், அல்மாஸ்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

அஸ்தானா,

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 57 கிலோ உடல் எடைபிரிவின் இறுதிஆட்டத்தில் இந்திய இளம் வீரர் அமன் ஷெராவத், கிர்கிஸ்தானின் அல்மாஸ் ஸ்மன்பெகோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த மோதலில் அமன் ஷெராவத் 9-4 என்ற புள்ளி கணக்கில் அல்மாஸ்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

நடப்பு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். அரியானாவை சேர்ந்த 19 வயதான அமன் ஷெராவத் கடந்த ஆண்டு நடந்த 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர்கள் தீபக் குக்னா (79 கிலோ), தீபக் நெஹ்ரா (97 கிலோ) ஆகியோர் தங்களது அரைஇறுதியில் தோல்வியை சந்தித்து வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் களம் காணுகின்றனர்.

மேலும் செய்திகள்