< Back
பிற விளையாட்டு
ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இந்தியாவின்  தீபிகா பல்லிகல்  - ஹரிந்தர் பால்சிங் இணை சாம்பியன்

Image Courtesy : SAI Media

பிற விளையாட்டு

ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இந்தியாவின் தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால்சிங் இணை சாம்பியன்

தினத்தந்தி
|
30 Jun 2023 4:23 PM IST

இந்தியாவின் தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால்சிங் இணை மலேசியாவின் ரேச்சல் அர்னால்ட் - யுவான் யூயன் இணையை எதிர்கொண்டது.

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதி போட்டி இன்று நடைபெற்றது.இதில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால்சிங் இணை மலேசியாவின் ரேச்சல் அர்னால்ட் - யுவான் யூயன் இணையை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 11-10 , 11-8 என்ற கணக்கில் ரேச்சல் அர்னால்ட் - யுவான் யூயன் இணையை வீழ்த்தி இந்தியாவின் தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால்சிங் இணை சாம்பியன் பட்டம் வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால்சிங் இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்