
Image Tweeted By @SauravGhosal
ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று இந்திய அணி சாதனை

இந்திய ஆடவர் அணி, முதல்முறையாக ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றது.
சியோங்ஜு,
தென் கொரியாவின் சியோங்ஜு நகரில் ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் ஆடவர் பிரிவு இறுதிச்சுற்றில், சவுரவ் கோசல் தலைமையிலான இந்திய அணி 2-0 என குவைத் அணியை வீழ்த்தியது. இந்தியாவின் நட்சத்திர வீரரான சவுரவ் கோசல் குவைத்தின் அமர் அல்டாமிமியை 11-9, 11-2, 11-3 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் ரமித் தாண்டன் 11-5, 11-7, 11-4 என்ற செட்கணக்கில் அலி அரமேசியை வென்றார். கடைசி ஆட்டத்தில் அபய் சிங், பலாஹ் முகமது மோதுவதாக இருந்தது. ஏற்கனவே இந்தியா 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதால், இப்போட்டி விளையாடப்படவில்லை.
இதனால் 2-0 என வெற்றி பெற்ற இந்திய ஆடவர் அணி, முதல்முறையாக ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றது. இதேபோல், இந்திய பெண்கள் அணி அரையிறுதியில் மலேசியாவிடம் 1-2 என தோல்வியடைந்ததால், வெண்கலப் பதக்கம் கிடைத்தது.