< Back
பிற விளையாட்டு
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்றார்

Image Courtesy : @OfficialNRAI

பிற விளையாட்டு

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்றார்

தினத்தந்தி
|
25 Oct 2023 5:59 AM IST

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்றார்.

புதுடெல்லி,

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வோன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீரர் சரப்ஜோத் சிங் (221.1 புள்ளி) வெண்கலப்பதக்கம் வென்றார்.

இதன் மூலம் அவர் அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை உறுதி செய்தார். இதில் சீன வீராங்கனைகள் ஜாங் யிபான் (243.7 புள்ளி) தங்கப்பதக்கமும், லூ ஜின்யாவ் (242.1 புள்ளி) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்