< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆசிய ஜூனியர் கைப்பந்து: இந்திய அணிக்கு முதல் வெற்றி
|17 Aug 2022 2:33 AM IST
நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி தாய்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.
டெக்ரான்,
8 அணிகள் இடையிலான 14-வது ஆசிய ஜூனியர் (18 வயதுக்கு உட்பட்டோர்) கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஈரான் தலைநகர் டெக்ரானில் நடந்து வருகிறது. இதில் 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சந்தித்தது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 25-21, 24-26, 27-25, 25-23 என்ற செட் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. முதலாவது ஆட்டத்தில் ஜப்பானிடம் போராடி தோற்று இருந்த இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை தென்கொரியாவுடன் மோதுகிறது.