< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆசிய உள்ளரங்கு தடகள போட்டி: மும்முறை தாண்டுதலில் தமிழக வீரர் வெள்ளி வென்றார்
|10 Feb 2023 10:46 PM IST
ஆசிய உள்ளரங்கு தடகள போட்டியில் மும்முறை தாண்டுதலில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அஸ்தானா,
10-வது ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தமிழக வீரர்கள் 7 பேர் உட்பட இந்தியாவிலிருந்து 26 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். மும்முறை தாண்டுதலில் 16.98 மீட்டர் தூரத்தை தாண்டி பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.