< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆசிய விளையாட்டு: வில்வித்தை போட்டியில் இந்திய அணிக்கு தங்கம்
|5 Oct 2023 9:30 AM IST
ஆசிய விளையாட்டு தொடரின் வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.
ஹாங்சோவ்,
வில்வித்தையில் காம்பவுண்ட் பெண்கள் அணிகள் பிரிவின் இறுதி போட்டியில் இந்திய அணியும் சீன தைபே அணியும் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 230-228 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தியது. இதனால், இந்திய அணிக்கு தங்கம் கிடைத்தது. ஆசிய விளையாட்டு தொடரில் இந்திய அணி வெல்லும் 19-வது தங்கம் இதுவாகும்.