< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆசிய செஸ் போட்டி: தமிழக வீராங்கனை 6 தங்கம் வென்று சாதனை
|12 Dec 2022 2:56 AM IST
தமிழக வீராங்கனை சர்வாணிகா ரேபிட், பிளிட்ஸ் பந்தயங்களில் தலா 7 சுற்றிகளிலும் வெற்றி பெற்றார்.
சென்னை,
16-வது ஆசிய பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இலங்கையின் வாஸ்கதுவாவில் ஒரு வாரம் நடந்தது. இதில் 7 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனை சர்வாணிகா ரேபிட், பிளிட்ஸ் பந்தயங்களில் தலா 7 சுற்றிகளிலும் வெற்றி பெற்றார்.
ஸ்டாண்டர்டு பிரிவில் விளையாடிய 9 ரவுண்டுகளிலும் அவரே வாகை சூடினார். 3 பிரிவிலும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய அவர் அணிகள் பிரிவையும் சேர்த்து மொத்தம் 6 தங்கப்பதக்கங்களை குவித்து சாதனை படைத்தார்.
சர்வாணிகா, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.