ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப்: 12 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா
|ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப்பில் இந்தியாவுக்கு 12 பதக்கங்கள் உறுதியாகிவிட்டன.
ஜோர்டான்,
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இந்த தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகின்றன. இதில் லவ்லினா, சிவ தபா, சுமித் உட்பட 12 இந்திய வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.
இவர்கள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளதால் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப்பில் இந்தியாவுக்கு 12 பதக்கங்கள் உறுதியாகிவிட்டன. பெண்களுக்கான அரையிறுதி போட்டி நாளையும் ஆண்களுக்கான அரையிறுதி போட்டி நாளை மறுநாளும் தொடங்குகிறது.
2020 டோக்கியோ ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ) தனது அரையிறுதிப் போட்டியில் கொரிய குடியரசின் சியோங் சுயோனை நாளை எதிர்கொள்கிறார். இந்தியாவின் பர்வீன் (63 கிலோ) மங்கோலியாவின் யுரன்பிலெக் ஷினெட்செட்செக்கை எதிர்கொள்கிறார்.
அதே நேரத்தில் தொடரின் அறிமுக வீராங்கனை ப்ரீத்தி (57 கிலோ) டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஜப்பானின் ஐரி சேனாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். இந்தியா சார்பில் அல்பியா பதான் (81+ கிலோ), சாவீட்டி (81 கிலோ), அங்குஷிதா போரோ (75 கிலோ), மீனாட்சி (52 கிலோ) ஆகியோரும் அரையிறுதியில் களம் காண்கின்றனர்.
ஆடவர் பிரிவில், சிவ தபா (63.5 கிலோ) முகமது ஹுசாமுதீன் (57 கிலோ), நரேந்தர் (92+ கிலோ), சுமித் (75 கிலோ), கோவிந்த் குமார் சஹானி (48 கிலோ) ஆகியோர் அரையிறுதியில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்யும் முனைப்பில் களம் காண்கின்றனர்.