< Back
பிற விளையாட்டு
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு  முன்னேறிய இந்திய மகளிர் அணி

image courtesy; twitter/@BAI_Media

பிற விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி

தினத்தந்தி
|
17 Feb 2024 6:32 PM IST

இந்திய அணி இறுதிப்போட்டியில் தாய்லாந்துடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

சிலாங்கூர்,

மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே பி.வி.சிந்து தலைமையிலான இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய அணி இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜப்பானுடன் மோதியது. இதில் முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பி.வி.சிந்து தோல்வியடைந்தாலும், இரட்டையர் பிரிவில் காயத்தின் காரணமாக விலகிய மற்றொரு இந்திய வீராங்கனைக்கு பதிலாக அஸ்வினி பொன்னப்பாவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார்.

மற்ற போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றனர். முடிவில் 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு வரலாற்றில் முதல் முறையாக முன்னேறியுள்ளது. இந்திய அணி இறுதிப்போட்டியில் தாய்லாந்துடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

மேலும் செய்திகள்