< Back
பிற விளையாட்டு
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Image Courtesy : PTI 

பிற விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
26 April 2023 11:58 PM IST

இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து, வென்சி ஹூவுடன் மோதினார்.

துபாய்,

40-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபேயின் வென்சி ஹூவுடன் மோதினார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-15, 22-20 , என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், அட்னன் இப்ராகிம் (பக்ரைன்), எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் 21-13. 21-8 , என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்,

மேலும் செய்திகள்