< Back
பிற விளையாட்டு
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளிப்பதக்கம்

கோப்புப்படம்

பிற விளையாட்டு

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளிப்பதக்கம்

தினத்தந்தி
|
15 July 2023 5:13 PM IST

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளிப்பதக்கங்கள் கிடைத்துள்ளது.

பாங்காக்,

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இந்த தொடரில் 4-வது நாளான இன்று முன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கலப்பதக்கம் வென்றார். அவர் இலக்கை 49.09 வினாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார்.

இந்த நிலையில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளிப்பதக்கங்கள் கிடைத்துள்ளது. உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சர்வேஷ் 2.26 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மேலும் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் எம் ஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் 8.37 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி வென்றார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 5 தங்கம், 3 வெள்ளி உட்பட 12 பதக்கங்களை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்