< Back
பிற விளையாட்டு
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் நிறைவு: 27 பதக்கங்களுடன் இந்தியா 3-வது இடம்
பிற விளையாட்டு

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் நிறைவு: 27 பதக்கங்களுடன் இந்தியா 3-வது இடம்

தினத்தந்தி
|
16 July 2023 6:36 PM IST

தொடரில் 6 தங்கப் பதக்கம் உள்பட மொத்தம் 27 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

பாங்காக்,

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் கடந்த ஜூலை 12-ந்தேதி 24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் தொடங்கியது. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஹெப்டத்லான், கலப்பு தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் இன்று நிறைவடைந்தது. இந்த தொடரில் 6 தங்கப் பதக்கம் உள்பட மொத்தம் 27 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இதன்படி 6 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியா பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. பதக்கப்பட்டியலில் ஜப்பான் முதலிடத்தையும், சீனா 2-வது இடத்தையும் பிடித்துள்ளன.

மேலும் செய்திகள்