< Back
பிற விளையாட்டு
ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்ற இந்திய அணி
பிற விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்ற இந்திய அணி

தினத்தந்தி
|
19 Feb 2023 12:52 AM IST

இந்தியா 2-3 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவிடம் தோல்வியடைந்து வெண்கலப்பதக்கத்தை முதல்முறையாக கைப்பற்றியது.

துபாய்,

ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் கடந்த பிப்., 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

இதன் அரையிறுதி போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் பிரனாய் 13-21, 15-21 என லீ லானிடம் வீழ்ந்தார். பெண்கள் ஒற்றையரிலும் இந்தியாவின் சிந்து 9-21, 21-16, 18-21 என பாங் ஜியிடம் போராடி தோற்றார்.

இதன்பின் நடந்த ஆண்கள் இரட்டையரில் துருவ், சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 21-19 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரிஷா, காயத்ரி ஜோடி 21-18, 13-21, 21-19 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற, ஸ்கோர் 2-2 என சமநிலையை எட்டியது.

இறுதியாக நடந்த, கலப்பு இரட்டையரில் இந்தியாவின் இஷான், தனிஷா ஜோடி 17-21, 13-21 என தோல்வியடைந்தது. முடிவில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் தோல்வியடைந்து முதல் முறையாக வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

மேலும் செய்திகள்