< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கைக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயம்

Image Courtesy : @BCCI twitter

கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கைக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயம்

தினத்தந்தி
|
12 Sept 2023 8:00 PM IST

இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்தது.

கொழும்பு,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இந்திய அணியில் ஒரே மாற்றமாக ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் படேல் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் சுப்மன் கில் 19 ரன்களில் போல்ட் ஆனதைத் தொடர்ந்து அடுத்து களமிறங்கிய விராட் கோலி 3 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

மறுபுறம் அரைசதத்தைக் கடந்த ரோகித் சர்மா 53 ரன்களில் போல்ட் ஆனார். சற்று நிதானமாக ஆடிய இஷான் கிஷன் 33 ரன்களிலும், கே.எல்.ராகுல் 39 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், இந்திய அணி 47 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பின்னர் மழை நின்றவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 214 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை அணி தற்போது விளையாடி வருகிறது.

மேலும் செய்திகள்