< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தனிஷா-அஸ்வினி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!
|10 Dec 2023 4:10 AM IST
நேற்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, நெதர்லாந்தின் டிபோரா-செரில் சினென் ஜோடியுடன் மோதியது.
கவுகாத்தி,
கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அசாமில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, நெதர்லாந்தின் டிபோரா-செரில் சினென் ஜோடியுடன் மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தனிஷா-அஸ்வினி ஜோடி 21-12, 21-12 என்ற நேர்செட்டில் டிபோரா-செரில் சினென் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.