< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் பி.வி.சிந்து தோல்வி
|15 Oct 2023 2:38 AM IST
ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் அரைஇறுதி போட்டியில் பி.வி.சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்.
வான்டா,
ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் போட்டி பின்லாந்து நாட்டின் வான்டா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் சீன வீராங்கனை வாங் ஜி யியுடன் மோதினார்.
63 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 12-21, 21-11, 7-21 என்ற செட் கணக்கில் வாங் ஜி யிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.