< Back
பிற விளையாட்டு
வில்வித்தை உலகக் கோப்பை: இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை

கோப்புப்படம்

பிற விளையாட்டு

வில்வித்தை உலகக் கோப்பை: இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை

தினத்தந்தி
|
25 May 2024 11:44 AM IST

தென்கொரியாவில் வில்வித்தை உலகக் கோப்பை (ஸ்டேஜ்-2) நடைபெற்று வருகிறது.

சியோல்,

2024 வில்வித்தை உலகக் கோப்பை தொடர் தென் கொரியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் உலகின் முன்னணி மகளிர் கூட்டு வில்வித்தை அணியான இந்தியாவை சேர்ந்த ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி அணி துருக்கி அணியை 232-226 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.

ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி இணை ஏற்கனவே ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை ஸ்டேஜ்-1ல் இத்தாலி அணியை வீழ்த்த தங்கம் வென்றனர். இந்த இணை கடந்த ஆண்டு இறுதியில் பாரிஸ் நகரில் நடைபெற்ற போட்டியிலும் தங்கம் வென்று அசத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் நடைபெறும் கலப்பு அணியில் ஜோதி, பிரியான்ஷ் தங்கத்திற்கான போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்