< Back
பிற விளையாட்டு
ஆசிய விளையாட்டு போட்டி - இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்
பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி - இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்

தினத்தந்தி
|
30 Sept 2023 4:06 PM IST

ஆசிய விளையாட்டு போட்டியின் ஸ்குவாஷ் ஆடவர் அணிகள் பிரிவில் இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணி தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றது.

இந்நிலையில் ஸ்குவாஷ் ஆடவர் அணிகள் பிரிவில் இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொண்டது.

இதில் சவ்ரவ் கோஷல் மற்றும் மங்கோகர் மகேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர் கொண்டது. மிகவும் பரபரப்பாக போட்டி நடைபெற்றது. இதில் 2- 1 என்ற செட் கணக்கில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. இதன் மூலம் இந்தியாவின் தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது

மேலும் செய்திகள்