< Back
பிற விளையாட்டு
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற சென்னை மாணவருக்கு ரூ.3½ லட்சம் ஊக்கத்தொகை
பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற சென்னை மாணவருக்கு ரூ.3½ லட்சம் ஊக்கத்தொகை

தினத்தந்தி
|
21 Oct 2023 4:37 AM IST

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற சென்னை மாணவருக்கு ரூ.3½ லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

சென்னை,

சமீபத்தில் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டில் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் அபய் சிங் தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கம் வென்றார். இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு நேற்று அந்த கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது.

விழாவில் கல்லூரி தாளாளர் மஞ்சித் சிங் நய்யார், துணைத் தலைவர் சர்தார் ஜஸ்பிர் சிங் நருலா, இந்திய ஸ்குவாஷ் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீசைரஸ் போஞ்சா, பயிற்சியாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் அபய் சிங்குக்கு விருதுடன், குருநானக் கல்லூரி குழுமம் சார்பில் ரூ.3½ லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்