< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
அகில இந்திய பீச் வாலிபால் போட்டி - சென்னையில் இன்று தொடங்குகிறது
|8 March 2024 5:38 AM IST
சென்னை நீலாங்கரை கடற்கரையில் இன்று முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை,
மெரினா பீச் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இந்தியன் பீச் வாலிபால் (கடற்கரை கைப்பந்து) புரோ டூர் போட்டி சென்னை நீலாங்கரை கடற்கரையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மராட்டியம், தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 16 ஆண்கள் அணியினரும், 12 பெண்கள் அணியினரும் கலந்து கொள்கிறார்கள்.
லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் ரூ.1 லட்சமும், பெண்கள் பிரிவில் ரூ.50 ஆயிரமும் பரிசாக வழங்கப்படுகிறது. போட்டி காலை 8 முதல் பகல் 12 மணி வரையும், மாலை 3 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மின்னொளியிலும் நடைபெறுகிறது.