< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
அகில இந்திய பேட்மிண்டன் போட்டிக்கு எஸ்.ஆர்.எம். வீராங்கனைகள் தகுதி
|7 Oct 2022 1:52 AM IST
அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் அகில இந்திய பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் போட்டிக்கு மமாகியா-ராஷ்மிதா ஜோடி தகுதி பெற்றது.
சென்னை,
தென்னிந்திய கல்லூரிகளுக்கான பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டி சென்னையில் உள்ள முகப்பேரில் நடந்தது. இந்த போட்டியில் மொத்தம் 32 இணைகள் கலந்து கொண்டன.
இதன் இறுதிப்போட்டியில் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜோடியான லங்கா மமாகியா-ராஷ்மிதா 11-8, 11-9 என்ற நேர்செட்டில் நிதிஷா (எம்.ஓ.பி.வைஷ்ணவா)-சூர்யா (நிர்மலா கல்லூரி) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இதன் மூலம் லங்கா மமாகியா-ராஷ்மிதா ஜோடி அடுத்த மாதம் (நவம்பர்) டெல்லியில் நடைபெறும் அகில இந்திய பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் போட்டிக்கு தகுதி பெற்றது.