< Back
பிற விளையாட்டு
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்

கோப்புப்படம்

பிற விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
12 March 2024 8:45 AM IST

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

பர்மிங்காம்,

நூற்றாண்டுகாலம் பழமை வாய்ந்த ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. 17-ந் தேதி வரை நடைபெறும் 1,000 தரவரிசை புள்ளி கொண்ட இந்த போட்டியில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

பிரகாஷ் படுகோனே (1980), கோபிசந்த் (2001) ஆகியோருக்கு பிறகு இந்தியர்கள் யாரும் இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. அந்த குறையை இந்த முறையாவது இந்திய வீரர், வீராங்கனைகள் போக்குவார்களா? என்று ரசிகர்கள் பேராவல் கொண்டுள்ளனர்.

ஆசிய சாம்பியனும், சமீபத்தில் பிரெஞ்சு ஓபனில் வாகை சூடிய ஜோடியுமான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி இணை இதிலும் பட்டம் வென்று சாதிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சாத்விக் - சிராக் ஜோடி தங்களது முதல் சுற்றில் இந்தோனேசியாவின் முகமது அக்சன் - ஹேந்திர செடிவான் இணையை எதிர்கொள்கிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்சயா சென், எச்.எஸ்.பிரனாய், ஸ்ரீகாந்த், பிரியன்ஷூ ரஜாவத்தும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, ஆகர்ஷி காஷ்யப்பும், இரட்டையர் பிரிவில் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த், தனிஷா கிரஸ்டோ -அஸ்வினி பொன்னப்பா ஜோடி ஆகிய இந்தியர்களும் களம் காணுகிறார்கள்.

மேலும் செய்திகள்