< Back
பிற விளையாட்டு
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: அதிர்ச்சி தோல்வி கண்ட சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை

Image Courtesy: @badmintonphoto / @BAI_Media

பிற விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: அதிர்ச்சி தோல்வி கண்ட சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை

தினத்தந்தி
|
15 March 2024 9:00 AM IST

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.

பர்மிங்காம்,

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரவில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டமான ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை, இந்தோனேஷியாவின் முகமது சோஹிபுல் பிக்ரி - பகாஸ் மவுலனா உடன் பலப்பரீட்சை நடத்தியது.

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை 16-21, 15-21 என்ற செட் கணக்கில் முகமது சோஹிபுல் பிக்ரி - பகாஸ் மவுலனா இணையிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினர்.

மேலும் செய்திகள்