< Back
பிற விளையாட்டு
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: வெற்றியுடன் தொடங்கிய சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை

image courtesty:AFP 

பிற விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: வெற்றியுடன் தொடங்கிய சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை

தினத்தந்தி
|
14 March 2024 12:27 PM IST

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் லக்‌ஷயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பர்மிங்காம்,

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை, இந்தோனேசியாவின் முகமது அஹ்சன் - ஹெண்ட்ரா செட்டியவான் ஜோடியுடன் மோதியது.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய இணை 21-18 மற்றும் 21-14 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனிசிய இணையை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.

இவர்கள் தனது அடுத்த சுற்று ஆட்டத்தில் முகமது சோஹிபுல் பிக்ரி - பகாஸ் மவுலனா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

இதில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரரான லக்ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மேலும் செய்திகள்