< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: 2வது சுற்றில் பி.வி.சிந்து தோல்வி
|14 March 2024 8:08 PM IST
2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தென் கொரியாவின் செ யங்குடன் மோதினார்.
பர்மிங்காம்,
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது . மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறும் 1,000 தரவரிசை புள்ளி கொண்ட இந்தப் போட்டியில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தென் கொரியாவின் செ யங்குடன் மோதினார்.
இதில் பி.வி. சிந்து 19-21, 11-21 என நேர் செட்களில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் அவர் தொடரில் இருந்து வெளியேறினார்.