< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன்: முதல் சுற்றில் பிரனாய், லக்ஷயா வெற்றி
|15 March 2023 3:37 AM IST
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சவாலை சீனாவின் ஜாங் யி மானுடன் தொடங்குகிறார்.
பர்மிங்காம்,
பேட்மிண்டனில் மிகவும் கவுரவமிக்க போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பர்மிங்காம் நகரில் நேற்று தொடங்கியது. உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்தபோட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.10¼ கோடியாகும்.
இதில் ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகத்தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 21-19, 22-20 என்ற நேர் செட்டில் சீனத்தைபேயின் சூ வெய் வாங்கை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-18, 21-19 என்ற நேர் செட்டில் சீனத்தைபேயின் சோவ் டைன் சென்னை தோற்கடித்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சவாலை சீனாவின் ஜாங் யி மானுடன் தொடங்குகிறார்.