< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
பல வருட போராட்டத்துக்கு பிறகு தமிழக செஸ் வீரர் ஷாம் நிக்கில் கிராண்ட் மாஸ்டர் ஆனார்
|14 May 2024 2:19 AM IST
தமிழக செஸ் வீரரான ஷாம் நிக்கில் இந்தியாவின் 85-வது கிராண்ட் மாஸ்டராகி இருக்கிறார்.
துபாய்,
தமிழக செஸ் வீரரான ஷாம் நிக்கில் இந்தியாவின் 85-வது கிராண்ட் மாஸ்டராகி இருக்கிறார். கிராண்ட் மாஸ்டருக்கான முதல் தகுதி இலக்கை 2011-ம் ஆண்டும், 2-வது தகுதி இலக்கை 2012-ம் ஆண்டும் கடந்த ஷாம் நிக்கில் 3-வது மற்றும் கடைசி தகுதி இலக்கை 12 வருட போராட்டத்துக்கு பிறகு எட்டிப்பிடித்து சாதித்து இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த துபாய் போலீஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் அவர் 9 சுற்றுகள் முடிவில் ஒரு வெற்றி, 8 டிரா கண்டு 5 புள்ளிகள் பெற்றார். இதன் மூலம் எலோ ரேட்டிங்கில் 2,500-ஐ கடந்து கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை எட்டினார். அவர் தமிழகத்தின் 30-வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.