< Back
பிற விளையாட்டு
பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நடிகை நிவேதா பெத்துராஜ்
பிற விளையாட்டு

பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நடிகை நிவேதா பெத்துராஜ்

தினத்தந்தி
|
24 Jan 2024 8:25 AM IST

கலப்பு இரட்டையர் பிரிவில் மதுரை அணிக்காக பங்கேற்ற நிவேதா பெத்துராஜ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

சென்னை,

நடிகை நிவேதா பெத்துராஜ் சினிமாவைத் தாண்டி விளையாட்டு வீராங்கனையாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில், டால்பின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நடத்திய பேட்மிண்டன் போட்டியில் நடிகை நிவேதா பெத்துராஜ் பங்கேற்றார்.

இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் மதுரை அணிக்காக பங்கேற்ற நிவேதா பெத்துராஜ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இதையடுத்து கோப்பை மற்றும் பதக்கத்துடன் நிவேதா பெத்துராஜ் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்